Last Updated:
Summer Season Fruits: கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் சம்மர் சீசன் பழங்கள் விற்பனையும் களைகட்டத் துவங்கியுள்ளது.
வெயில் கொளுத்தும் கோடைக்காலம் கால நிலையில் வேண்டுமானால் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் இந்த கோடைக் காலத்தில்தான் நுங்கு, பதநீர் முதல் மாம்பழம், பலாப்பழம் எனப் பல வகைப் பழங்களின் சீசன் இருக்கும்.
இந்த கோடைகால பழ வகைகள் பல பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சில வித்தியாசமான பழங்கள் இந்த கோடைக்காலத்தில் கிடைக்கும். அப்படி மலைப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் நீர்க்குமளி என்றழைக்கப்படும் வாட்டர் ஆப்பிள் சீசன் தற்போதே துவங்கி, பல இடங்களில் விற்பனைக்கும் வந்துள்ளது.
இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த வாட்டர் ஆப்பிளானது சற்று புளிப்பு தன்மையுடன் தண்ணீர் சத்துடன் காணப்படும். வெயில் காலம் ஆரம்பிக்கவுள்ளதால் இதன் வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக தூத்துக்குடி மக்கள் குற்றாலம் சீசனுக்கு அருவிகளில் குளிக்கச் செல்லும் போது இந்த பழத்தை ஒரு கை பார்ப்பார்கள். ஆனால் இப்போது தூத்துக்குடியிலேயே இந்த பழத்தைக் காண முடிகிறது.
அந்த வகையில் இங்கு மாவட்டத்தில் பல இடங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளா, குற்றாலம் போன்ற மலைப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் பழம் தற்போது தூத்துக்குடி நகரிலேயே விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
தூத்துக்குடியில் விற்பனை செய்யப்படும் இந்த வாட்டர் ஆப்பிளானது கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வாட்டர் ஆப்பிளானது 400 ரூபாய் வரை விற்பனையாகின்றது, இருப்பினும் இது சீசனில் மட்டுமே கிடைக்கும் பழம் என்பதால் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 22, 2025 10:32 AM IST
Summer Season Fruits: கோடை வெயிலில் உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழங்கள்… களைகட்டும் வாட்டர் ஆப்பிள் விற்பனை…

