Last Updated:
வார விடுமுறையில் வீட்டிற்கு வந்து விவசாய வேலைகளை செய்து வருபவர் தற்போது நித்ய கல்யாணி பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.
தென் மண்டலத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு இடையில் பரந்த கரிசல் நிலப்பரப்பாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்தை பொருத்தவரை வானம் பார்த்த நிலை தான். அதாவது மழைகாலத்தில் மட்டும் மானாவாரி பயிர்களை விளைவித்து மற்ற நாட்களில் நிலத்தை தரிசாக போட்டு வைத்து விடுவார்கள். மழை மழையில்லாத காரணத்தால் விவசாயத்தையே பார்ட் டைம்மாக பார்க்கும் நிலை இங்கே உள்ள போது ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து வருகிறார் ஐ.டி ஊழியரான கிருஷ்ண குமார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை மேலதுலுக்கன் குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். பி.டெக் படித்து முடித்துவிட்டு சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வார விடுமுறையில் வீட்டிற்கு வந்து விவசாய வேலைகளை செய்து வருபவர் தற்போது நித்ய கல்யாணி பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.
February 20, 2025 6:40 PM IST
வானம் பார்த்த பூமியில் ஆண்டு முழுவதும் விவசாயம்.. நித்ய கல்யாணி பூக்கள் வளர்க்கும் ஐடி ஊழியர்!
