இந்தத் திட்டமானது 0 முதல் 18 வயதுடைய இந்தியக் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான ஓய்வூதியத் திட்டமாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரில் ஒரு கணக்கை திறப்பதன் மூலம், ஓய்வூதியத்திற்கான சேமிப்பை அவர்களுக்கு தொடங்கலாம். உங்கள் குழந்தைக்கு 60 வயதாகும்போது ரூ.100 கோடி ஓய்வூதிய நிதியை எப்படி உருவாக்குவது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
NPS வாத்சல்யா யோஜனா என்றால் என்ன?
NPS வாத்சல்யா யோஜனா என்பது இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும், இது அவர்களின் ஓய்வூதியத்திற்கு தயாராகிறது. NPS வாத்சல்யா என்பது அரசுக்கு சொந்தமான பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி மற்றும் டெவெலப்மென்ட் அதாரிட்டி (PERDA)ஆல் நிர்வகிக்கப்படும் திட்டமாகும். மேலும், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பணத்தை சேமித்து வைக்கும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கிறது.
NPS வாத்சல்யா திட்டத்திற்கு யார் தகுதியானவர்?
இத்திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். குழந்தைக்கு 18 வயதாகும் வரை திட்டம் செயல்படுத்தப்படும். குழந்தைகள் வயதுவந்த நிலையை அடைந்த பிறகு கணக்கைத் தொடரலாம் அல்லது நிறுத்தலாம்.
Also Read: Gold Rate 20 February | வரலாற்றின் புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
NPS வாத்சல்யா கணக்கை யார் நிர்வகிக்கலாம்?
ஒரு மைனர் பெயரில் கணக்கு திறக்கப்பட்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலரால் நிர்வகிக்கப்படும். மைனர் மட்டுமே பெனிபிஸியரியாக இருக்க வேண்டும்.
NPS வாத்சல்யாவில் குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?
என்பிஎஸ் வாத்சல்யா யோஜனாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு தேவை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு இல்லை.
என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
- குழந்தையின் வயதுச் சான்று (பர்த் சர்டிஃபிகேட், ஸ்கூல் லீவிங் சர்டிஃபிகேட், மெட்ரிகுலேஷன் சர்டிஃபிகேட், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட்).
- பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, NREGA வேலைவாய்ப்பு அட்டை அல்லது தேசிய மக்கள் தொகைப் பதிவு ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் KYCஐ முடிக்க வேண்டும்.
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு கட்டாயம்.
என்பிஎஸ் வாத்சல்யாவில் முதலீட்டு விருப்பம்:
இந்தியாவில் உள்ள NPS வாத்சல்யா முதலீட்டாளர்களுக்கு இரண்டு வகையான முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது. ஆக்ட்டிவ் சாய்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஆட்டோ சாய்ஸ் இன்வெஸ்ட்மென்ட். சரி இப்போது, நாம் ஆக்ட்டிவ் சாய்ஸ் இன்வெஸ்ட்மென்ட் பற்றி பார்ப்போம்.
குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு என்ன செய்யலாம்?
- அவர்கள் NPS டையர் – I க்கு மாற்றப்படலாம்.
- Fresh KYCஆனது மைனர்களுக்கு 18 ஆண்டுகள் முடிந்த தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செய்யப்படுகிறது.
NPS வாத்சல்யா: ரூ.100 கோடி ஓய்வூதிய நிதிக்கு மாத முதலீடு எவ்வளவாக இருக்க வேண்டும்?
100 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதிக்கு, மாத முதலீடு ரூ.5,500 ஆகும். NPS கால்குலேட்டரின் படி கணக்கீடு பின்வருமாறு. இங்கே நாங்கள் ஆண்டு வருமானத்தில் 6.75% எடுத்துள்ளோம். மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் செலுத்தலாம். ரூ.5,500 முதலீடு செய்தால், உங்கள் குழந்தைக்கு 60 வயதாகும்போது, அவருடைய ஓய்வூதிய நிதி ரூ.100 கோடியாக இருக்கும்.
இதையும் படிக்க: வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலனை…
மொத்த முதலீடு ரூ.2,33,36,525 ஆகவும், மதிப்பிடப்பட்ட கேப்பிடல் லாபம் ரூ.98,40,14,537 ஆகவும், இறுதித் தொகை ரூ.1,00,73,51,062ஆகவும் இருக்கும். இதனால் உங்கள் குழந்தை பெறும் மாத ஓய்வூதியம் ரூ.22,66,540ஆக இருக்கும்.
February 20, 2025 4:00 PM IST
NPS Vatsalya Yojana | 60 வயதில் உங்கள் குழந்தைக்கு ரூ.100 கோடி ஓய்வூதியத்தை உருவாக்குவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

