Last Updated:
நியூ இந்தியா கோ-ஆப்ரேட்டிவ் பேங்க் மோசடி வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களில் நிதிச் சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு, பேங்க் டெபாசிட்களுக்கான இன்ஷூரன்ஸ் லிமிட்டை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரூ.5 லட்சமாக இருக்கும் பேங்க் டெபாசிட்களுக்கான (வங்கி வைப்புத்தொகை) காப்பீட்டு வரம்பை மேலும், உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, மத்திய அமைச்சரவை விவாதித்து முடிவை எடுத்தவுடன், பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிடும் என்று நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியா கோ-ஆப்ரேட்டிவ் பேங்க் மோசடி வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களில் நிதிச் சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு, பேங்க் டெபாசிட்களுக்கான இன்ஷூரன்ஸ் லிமிட்டை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேங்க் டெபாசிட்களுக்கான காப்பீட்டு வரம்பை அதிகரிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், இது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாகராஜு கூறினார்.
இதனிடையே ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ், கூட்டுறவு வங்கித் துறை நன்கு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த துறையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் வலுவாக இருப்பதாகவும் பொருளாதார விவகாரங்கள் செயலர் அஜய் சேத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஒரு நிறுவனத்தில் ஏற்படும் நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட துறையின் ஸ்திரத்தன்மை குறித்தே சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடாது என்றும், தவறு செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒழுங்குமுறை ஆணையத்தின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார். 2019-ல் ஏற்பட்ட PMC வங்கி நெருக்கடிக்குப் பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டில் வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தியது நினைவிருக்கலாம்.
இதனிடையே வங்கியாளர்களை சந்தித்த சீதாராமன், ஜூலை பட்ஜெட்டில் 4.5%-க்கும் குறைவான இலக்கை நிர்ணயிக்கும் நிதிப்பற்றாக்குறை முடிவை எட்டுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார். உற்பத்தியை வலுப்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இதையும் படிக்க: PPF Formula | PPF-ல் ’15+5′ சூத்திரம் பற்றி தெரியுமா? நீங்கள் மாதந்தோறும் ரூ.40,000 வரை பெறுவீர்கள்!
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் “நாங்கள் இத்துடன் நிறுத்த மாட்டோம், சீர்திருத்தங்களின் வேகம் தொடரும், புதிய விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, எனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி, அணுசக்தி துறை போன்றவற்றில் முதலீடு செய்வதை நாம் காண்கிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவிக்க மாநில அரசுகளும் முன்வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பட்ஜெட் தயாரிப்பில் பெரிய மாற்றம், வரி செலுத்துவோரின் பணத்தை கையாள்வதில் பொறுப்பான அணுகுமுறை உள்ளிட்டவற்றை உறுதி செய்வதாகவும், மூலதன சொத்துக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கடன்களை வழங்குவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: Petrol Diesel Price | அதிரடியாக விலை குறையப்போகும் பெட்ரோல், டீசல்? மத்திய அரசு முக்கிய முடிவு.. என்ன தெரியுமா?
“நாங்கள் கடன் வாங்கினால், நாட்டை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக கடன் வாங்குகிறோம்” என்று கூறினார். “இந்தியா முதலீட்டாளர்களுக்கு நட்பு நாடாக இருக்கும் வகையில் கட்டமைத்து வருகிறோம். இதற்காக அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தொடரும்” எனவும் தெரிவித்தார்.
February 20, 2025 1:24 PM IST
வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலனை…


