யார் முதல்வராக தேர்தெடுக்கப்படுவார்? எனக் குழப்பம் நிலவிவந்த நிலையில் பாஜக பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், தன்கர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நாளை நண்பகல் 12.35 மணிக்கு தில்லியின் ராம்லீலா திடலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், தில்லியின் 9-வது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முதல்வர் அறிவிக்கப்பட்டதையடுத்து துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க பாஜக உரிமை கோர உள்ளது.
இந்த நிகழ்வில் ஏராளமான முக்கிய பிரமுகர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களின் முதல்வர்களும் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

