• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவில் மாபெரும் விரிவாக்கத் திட்டங்கள் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் அறிவிப்பு . | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மலேசியாவில் மாபெரும் விரிவாக்கத் திட்டங்கள் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் அறிவிப்பு . | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், 

 கோல்டு, ஆபரணத் துறையில் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், தொழில் முன்னேற்றம், சமூக பொறுப்பு திட்டங்களைப் பற்றி மேலாண்மை இயக்குநர் ஷாம்லால் அகமது கோல்டு டைமண்ட்ஸ் மஸ்ஜித் இந்தியா கிளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக மலேசியாவில் செயல்பட்டு வருகிறது.

 இந்த வரவேற்பு தமக்கும் மலபார் கோல்டு டைமண்ட்ஸ்க் கும் கிடைத்த மிகப்பெரிய ஒரு வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாக அவர் சொன்னார். இந்த 10 வருடங்களில் ஆதரவு வழங்கி வரும் மலேசிய வாடிக்கையாளர் களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு தருணம் என்றும் ஷாம்லால் தெரிவித்தார். மேலும் மலேசியா நாடு, மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் வளர்ச்சி வாய்ப்பு வழங்கும் சந்தையாக திகழ்கின்றது. 14 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், மலேசியாவில் கூடுதல் முதலீடு செய்யும் திட்டங்களை வகுத்துள்ளது. 2025, 2026இல் மலேசியா முழுவதும் உள்ள அனைத்து கோல்டு டைமண்ட்ஸ் கடைகளையும் புதுப் பித்து, மீண்டும் திறக்கும் பணிகள் போன்ற வற்றில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மலேசிய மக்களின் ஆதரவால் மேலும் மூன்று மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கடைகள் ஜோகூர் பாரு, பினாங்கு, கோலாலம்பூரில் கூடிய விரைவில் திறக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் மலேசியாவில் உள்ள 8 கிளைகளில் 105 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 17 விழுக்காடு உள்ளூர் மலேசிய இந்தியர்களே பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். வருகின்ற ஆண்டில் கோல்டு டைமண்ட்ஸ் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேலும் 50 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக அவர் உறுதியளித்தார். அதே சமயத்தில் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களுக்குப் பணி யாளர் பயிற்சி, வாடிக்கையாளர் சேவை, வியாபாரம் ஆகிய துறை களில் உள்ளூர் இளைஞர்களுக்கு கல்வியும் வேலை வாய்ப்புகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1993 முதல், நிறுவனத்தின் மொத்த லாபத்திலிருந்து 5 விழுக்காடு சமூகக் கடப்பாடு, பொறுப்புடைமை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடு பசித்தவர்களுக்கு உணவளிப்பது. பண்டிகை காலங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்குவதற்கு தாம் பயன்படுத்துவதாகவும் இனி வரும் காலங்களில் பள்ளிகள், தனித்து வாழும் தாய்மாரின் பிள்ளைகளின் படிப்பிற்கு, பின்தங்கிய சமூக மக்களை ஆதரிக்கும் திட்டங்களை மலேசியாவில் செயல்படுத்த உள்ளதாகவும் அவை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

2025, 2026இல் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகும். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல், டிஜிட்டல் விற்பனை முறைகளை அறிமுகப்படுத்தல், சமூக வளர்ச்சியை உறுதிசெய்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு. வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்துவதாக வும் மலேசிய சந்தையில் மேலும் முதலீடு செய்ய விருப்பம் உள்ள தாகவும் ஷாம்லால் கூறினார். பல்வேறு சமூகங்களை உள்ளடக் கிய இந்த நாட்டில் கோல்டு டைமண்ட்ஸ் விரிவடைவதைப் பெருமையாகக் கருதுகிறோம் என்று ஷாம்லால் அகமது செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். மேலும் செய்தியா ளர் கூட்டத்தின் சிறப்பு அம்சமாக மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கடந்த ஜனவரி 17 முதல் பிப்ரவரி 16 வரை மணமக்களுக் கான திருமண விழா போட்டியை நடத்தியது. இன்று அதன் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அகமது, இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர் களுள் ஒருஜோடி தம்பதியை துபாய் பயணிக்க தேர்வு செய்தார்.



Read More

Previous Post

“Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்..” – ட்ரம்ப் கூறியதென்ன? | Trump wanted ‘somebody smarter’ than Elon Musk to head DOGE

Next Post

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: காயமடைந்த சிறுவனும் பலி

Next Post
மித்தெனிய துப்பாக்கிச் சூடு: காயமடைந்த சிறுவனும் பலி

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: காயமடைந்த சிறுவனும் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin