
மித்தெனிய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன், இன்று (19) உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.
மித்தெனிய, கடேவத்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது.
துப்பாக்கிச் சூட்டையடுத்து, அவர் நபர் அதே இடத்திலேயே இறந்ததுடன், அவரது மகனும் மகளும் காயமடைந்தனர்.
இதனையடுத்து, தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

