Last Updated:
Watermelon Sales: கோடைக்காலம் துவங்கும் முன்னரே தூத்துக்குடியில் தர்ப்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பரவலாக மழையைப் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தைத் தணிப்பதற்காக இளநீர், தர்பூசணி போன்றவற்றைத் தேடி வாங்கி உண்கின்றனர்.
இதனால் கோடைக்காலம் துவங்கும் முன்னரே தூத்துக்குடியில் தர்பூசணி விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சாலையோரம் தற்காலிகமாகத் தர்பூசணி கடைகள் முளைத்திருக்கும்.
ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் வெம்மை துவங்கியுள்ளதால் தற்போதே தண்ணீர் பழத்தின் மீதான மக்களின் தேடல் அதிகரித்துள்ளது. இதனால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Sivagalai Excavation: மாணவர் கேட்ட அந்தக் கேள்வி… பதில் தேடிய ஆசிரியருக்குக் கிடைத்த வரலாற்றுப் பொக்கிஷம்…
தூத்துக்குடியில் விற்பனை செய்யப்படும் தர்பூசணியானது திண்டிவனம், உடுமலைப்பேட்டை போன்ற பல பகுதிகளிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. மேலும் தர்பூசணி மட்டும் இன்றி வாட்டர் மெலன் ஜூஸும் விற்பனை செய்யப்படுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் விரும்பி சாப்பிட்டுச் செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 17, 2025 5:47 PM IST