Last Updated:
இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததால், துபாயில் ஆட்டங்கள் நடக்கின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றடைந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானில் வரும் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அணி மறுத்ததால் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், மும்பையில் இருந்து புறப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாய் சென்றடைந்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோருடன் பயிற்சியாளர் கவுதம் காம்பிரும் பயணித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதவுள்ளது. தொடர்ந்து 23ஆம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி மோதவுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் தான் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜாவுக்கு கடைசி தொடர் என கருத்துக்கள் வருவதால், இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
February 16, 2025 12:23 PM IST


