Last Updated:
Mathi Weekly Market| பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையும், இயற்கை முறையில் விளைவித்த விவசாயிகளின் காய்கறிகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள சுய தொழில் செய்யும் மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளும் வகையில் மதி வாரச்சந்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த வாரச்சந்தையில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய உணவுப்பொருட்கள், திண்பண்டங்கள், ஆபரண வகைகள், ஆடை வகைகள், கைவினைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், எண்ணெய், புடவைகள், திருப்பூர் துணிகள், கீரை வகைகள் போன்ற அனைத்து பொருட்களும் இங்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இதையும் வாசிக்க: SP Balasubramaniam Road : பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பெருமை சேர்த்த தமிழக அரசு
இந்த வாரச்சந்தை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில், வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்று வருகிறது. மற்ற நாட்களில் பூ மாலை வணிக வளாகத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் எனவும் இதனை விழுப்புரம் நகர மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மகளிர் சுய உதவிக் குழு பெண்மணிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 15, 2025 1:17 PM IST

