எலிசா – ரிச்சா கோஷ் அதிரடி தாண்டவம்
மூன்றாவது பேட்டராக களமிறங்கிய எலிசா பெர்ரியும், நான்காவதாக களமிறங்கிய ராகவி பிஸ்தும் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக ஆடினர். ஒரு புறம் பெர்ரி பவுண்டரிகளால் ரன் குவிப்பில் ஈடுபட், ராகவி நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தார். இருவரும் இணைந்து 86 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்த் 25 ரன்கள் எடுத்திருந்தபோது டியாண்ட்ரா டாட்டின் வசம் சிக்கினார்.

