கராச்சி: பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 353 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே ரன் எடுக்க ஓடியபோது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி வாக்குவாதம் செய்தார். இதில் நடுவர் தலையிட்டு சமாதானம் செய்துவைத்தார். இதைத் தொடர்ந்து தெம்பா பவுமா ரன் அவுட் ஆனார்.
ஆனால் அவரை பெவிலியன் செல்லவிடாமல் வழிமறித்து சவுத் ஷகீல், கம்ரன் குலாம் ஆகியோர் கொண்டாடினர். இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதாக ஷாகீன் ஷா அப்ரீடிக்கு 25 சதவீத அபராதத்தையும் சவுத் ஷகீல், கம்ரன் குலாம் ஆகியோருக்கு 10 சதவீத அபராதத்தையும் விதித்துள்ளது.