கடந்த ஜனவரி 26 அன்று, சாவோ பாலோவிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் பாரிஸிலிருந்து தில்லிக்கும் பயணம் செய்த பிரேசிலைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார்.
அவரிடம் நடத்திய ஆய்வில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 959 கிராம் கோகைன் அடங்கிய ரூ.14.39 கோடி மதிப்புள்ள 93 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன.
அன்று கைது செய்யப்பட்ட பெண்ணைப் போன்று அதே பயண வழியில் பிப்ரவரி 7 அன்று இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்ணிடமும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
அவரது உடலை பரிசோதித்ததில், 768 கிராம் கோகைன் அடங்கிய 79 காப்ஸ்யூல்களை அதிகாரிகள் மீட்டனர். கைப்பற்றப்பட்ட கோகைனின் சந்தை மதிப்பு ரூ.11.52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது” என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொகைன் கடத்திய பெண்கள் இருவரும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

