• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

RCB Captain | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டன் இவர்தான்..! வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
February 13, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
RCB Captain | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டன் இவர்தான்..! வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. அதன்படி, ரஜத் படிதார் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன், ராகுல் டிராவிட், விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் என நீண்ட வரிசை கேப்டன்களுக்குப் பிறகு ஆர்சிபி அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெறுகிறார் ரஜத் படிதார்.

புதிய கேப்டனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விராட் கோலி, “நானும் மற்ற அணி வீரர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம் ரஜத்” என்று வாழ்த்து வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த அணியில் நீங்கள் வளர்ந்த விதமும், செயல்பட்ட விதத்தாலும் அனைத்து ஆர்சிபி ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளீர்கள். இது உங்களுக்கு மிகவும் தகுதியானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2013 முதல் 2021 வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி தலைமை தாங்கினார். பின்னர் 2022 முதல் 2024 வரை ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக டு பிளெசிஸ் விளையாட உள்ளார். ஆர்சிபி அணிக்காக கோலி சிறப்பான சாதனைகளை படைத்திருந்தாலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்தபடியாக, 143 போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளார். ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 68 வெற்றிகளையும், 70 தோல்விகளையும், 4 டிராவையும் கோலி தனது கேப்டன்சியில் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஆர்சிபியை அழைத்துச் சென்றதுடன், அந்த சீசனில் 973 ரன்கள் குவித்து இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையை படைத்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் 154 ஸ்டிரைக் ரேட்டில் 741 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிக்க: “இருவரையும் விளையாட வைக்க முடியாது…” – ரிஷப் பண்ட் குறித்து கவுதம் கம்பீர் ஓபன் டாக்

ரஜத் படிதார் ஏற்கனவே ஆர்சிபி அணியின் முக்கிய வீரராக இருந்துள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் மத்தியப் பிரதேச அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 10 போட்டிகளில் 186.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 428 ரன்கள் குவித்து அஜிங்கியா ரஹானேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரஜத் படிதார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் விவரம்:

தக்கவைக்கப்பட்டவர்கள்: விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), யாஷ் தயாள்

ஏலத்தில் வாங்கப்பட்டவர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார் சலாம், சுயாஷ் ஷர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் ஸ்வஸ்ட் பத்தேல், எல். அபிநந்தன் சிங், மோஹித் ரதி.

First Published :

February 13, 2025 12:48 PM IST

Read More

Previous Post

“டெல்லியை போல பாஜகவால் பிஹாரில் வெற்றி பெற முடியாது” – லாலு பிரசாத் யாதவ் | Lalu Prasad rejects BJP’s claim of forming government in Bihar post Delhi election results

Next Post

ரெப்போ ரேட்டை RBI குறைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கான சமீபத்திய FD விகிதங்கள்..!

Next Post
ரெப்போ ரேட்டை RBI குறைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கான சமீபத்திய FD விகிதங்கள்..!

ரெப்போ ரேட்டை RBI குறைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கான சமீபத்திய FD விகிதங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin