RBI-ன் இந்த முடிவு விரைவில் வங்கி மற்றும் நிதித்துறையில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இந்த நடவடிக்கை கடன் வாங்குபவர்கள் செலுத்தும் EMI தொகையை குறைக்கக்கூடும் என்றாலும், மறுபக்கம் பல முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய திட்டமாக இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD, தற்போது வழங்கப்பட்டுவரும் அதிக வட்டி விகிதங்கள் கணிசமாக குறையக்கூடும்.
ஆம், ரிசர்வ் வங்கியின் முக்கிய கடன் விகிதம் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், வங்கிகள் தாங்கள் வழங்கி வரும் FD-க்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் அதிக வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு முன்னர், பல வங்கிகள் தங்களின் FD திட்டத்தில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை ஆபத்து இல்லாத திட்டத்தில் முதலீடு செய்ய மற்றும் முதலீட்டுத் தொகை மீது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காலாண்டு /அரையாண்டு /ஆண்டு வட்டியைப் பெற FD திட்டங்கள் உதவுகின்றன.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளால் FD-க்களுக்கு வழங்கப்படும் சமீபத்திய வட்டி விகிதங்கள்:
பொதுவாக SFB எனப்படும் சிறு நிதி வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு FD திட்டங்களில் 9.42 சதவீதம் வரை அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில் Utkarsh சிறு நிதி வங்கியானது 1500 நாட்களில் மெச்சூரிட்டியடையும், மூத்த குடிமக்களுக்கான FD-க்கு அதிகபட்சமாக 9.42 சதவீத வட்டியையும் வழங்குகிறது. அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் அல்லாத பொதுமக்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.98 சதவீதமாகும். இதேபோல Au சிறுநிதி வங்கியானது 18 மாதங்களில் மெச்சூரிட்டி அடையும் FD-க்கு மூத்த குடிமக்களுக்கு 8.88% வட்டியை வழங்குகிறது.
அதேபோல ESAF சிறு நிதி வங்கியானது 888 நாட்களில் மெச்சூரிட்டியாகும் FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.88% வட்டியும், சூர்யோதய் வங்கி 5 ஆண்டுகளுக்கான FD-க்கு அதிகபட்சமாக 9.42% வட்டியும், ஜனா சிறு நிதி வங்கியானது 365 நாட்களில் மெச்சூரிட்டியாகும் FD-க்கு அதிகபட்சமாக 8.75% வட்டியும் வழங்குகிறது.
இதையும் படிக்க: வரப்போகிறது புதிய ரூபாய் நோட்டு.. அப்டேட் கொடுத்த ரிசர்வ் வங்கி
முன்னணி வங்கிகளின் சமீபத்திய FD விகிதங்கள்:
- 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 100 நாட்களுக்கும் குறைவான FD-க்கு HDFC வங்கியானது 7.85% வட்டியை வழங்குகிறது.
- 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான FD-க்கு ICICI வங்கியானது 7.85% வட்டியை வழங்குகிறது.
- 2 ஆண்டுகள் முதல் 30 மாதங்களுக்கும் குறைவான FD-க்கு ஆக்சிஸ் வங்கியானது 7.60% வட்டியை வழங்குகிறது.
- 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரையிலான FD-க்கு பரோடா வங்கியானது 7.65% வட்டியை வழங்குகிறது.
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-க்கு SBI வங்கியானது 7.50% வட்டியை வழங்குகிறது.
- 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்கு கனரா வங்கியானது 8.14% வட்டியை வழங்குகிறது.
இதையும் படிக்க: நாளை முதல் உயரும் பால் விலை… ஆவின் நிறுவனத்துக்கு மக்கள் வைத்த கோரிக்கை!
மூத்த குடிமக்களின் FD மீதான TDS விலக்குக்கான வரம்பு விகிதங்கள் உயர்வு:
ஏப்ரல் 01, 2025 முதல் TDS விலக்குக்கான வரம்பை அரசாங்கம் ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது. எனவே, மூத்த குடிமக்களின் FD-க்கு கழிக்கப்படும் வரி குறைவாக இருக்கும். அதாவது மூத்த குடிமக்களுக்கு ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்குகள், FD-க்கள் மற்றும் RD-லிருந்து வட்டியாக வரும் வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால், அதற்கு TDS விதிக்கப்படும்.
அதே நேரம் பொதுமக்களுக்கு, ஒரு நிதியாண்டிற்கான இந்த வரம்பு இன்னும் ரூ.50,000 ஆகவே உள்ளது. எனவே, வட்டி வருமானம் ரூ.50,000ஐத் தாண்டினால் TDS விதிக்கப்படும். இதனிடையே பிப்ரவரி 10, 2025 முதல் வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் FD விகிதங்கள் கிடைக்கின்றன.
இதையும் படிக்க: ஐதராபாத்தின் மிகப் பெரிய பணக்காரரின் மகள், ரூ.1,63,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் இயக்குநர்… யார் இந்த நீலிமா?
RBI ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து வங்கிகள் FD-க்கான வட்டி விகிதங்களை மாற்றியமைக்கலாம் என்பதால், நீங்கள் எந்தவொரு FD திட்டத்திலும் முதலீடு செய்யும் முன் புதுப்பிக்கப்பட்ட அல்லது சமீபத்திய விகிதங்களை சரிபார்க்க வேண்டும்.
February 13, 2025 6:13 PM IST

