01
2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர், பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானிலுள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மூன்று முக்கிய நகரங்களிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலும் நடைபெற உள்ளது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் காயத்தினால் விலகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


