
பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் சொமேட்டோ, ஸ்விகி மற்றும் பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர வேலையில்லாத ஊழியர்கள் இந்த சுகாதாரப் பாதுகாப்பு காப்பீட்டை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
ஜிக் ஒர்க்கர்ஸ் (Gig Workers) என்பது யார்?
2020 சமூகப் பாதுகாப்பு குறியீட்டின்படி, ஜிக் ஒர்க்கர்ஸ் (Gig Worker) என்பது வழக்கமான முதலாளி – பணியாளர் உறவை தாண்டி பணிபுரியும் அல்லது இழப்பீடு பெறும் எந்தவொரு நபரும் ஆவர். இவர்கள் பொதுவாக ஃப்ரீலான்ஸ் தொழிலாளர், கேப் ஓட்டுநர்கள் அல்லது உணவு விநியோகம் செய்பவர்கள் என தங்களது தேவைக்கேற்ப பணி செய்யும் நிரந்தர வேலையில்லாத பணியாளர்கள் ஆவர்.
பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY): முழு விவரங்கள்
பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்ட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் வருடாந்திர காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும். குறிப்பாக, ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும், ஏற்கனவே உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்பவராக இருந்தாலும், திட்டத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே இந்த காப்பீட்டில் சேர தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ், பதிவு செய்யப்பட்ட இ-ஷ்ரம் உறுப்பினர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த தகுதியுடையவர்கள் ஆவர்.
இ-ஷ்ரம் தளம்:
அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் குறிக்கோளுடன் இந்திய அரசாங்கம் இ-ஷ்ரம் தளத்தைத் தொடங்கியது. இது தொழிலாளர்களின் விரிவான டேட்டாபேஸை வைத்திருக்கிறது மற்றும் இவர்கள் அரசாங்க நலத்திட்டங்களை எளிதாக பெறவும் வழி செய்கிறது.
இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்வது எப்படி?
- ஆதார் எண்
- ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்
- வங்கி சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கியின் ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு
ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், ஒரு தொழிலாளி அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது மாநில சேவா கேந்திராவில் (SSK) பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தியும் இதற்கு பதிவு செய்யலாம்.
இதையும் படிக்க: கிக் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்: விரைவில் நடைமுறைக்கு வருமா…?
இ-ஷ்ரம் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
- www.eshram.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் இ-ஷ்ரம் போர்ட்டலின் செஃல்ப் ரிஜிஸ்ட்ரேஷன் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
- அதில், ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் செல்போன் எண்ணை டைப் செய்து “செண்டு ஓடிபி” என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர், உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஓடிபியை அதில் டைப் செய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- அதில் உள்நுழைந்த பிறகு, திரையில் காட்டப்படும் உங்களது தனிப்பட்ட தகவலை சரிபார்த்து, பின்னர் உங்கள் முகவரி, கல்வி, பரிந்துரைக்கப்பட்ட நாமினி மற்றும் வங்கித் தகவலுடன் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் இறுதியாக ‘சப்மிட்’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்.. ரூ.10-க்கு ‘ஸ்பின்னர்’ குளிர்பானத்தை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ்
பொருத்தமான வேலை, வணிகம் மற்றும் பணியை தேர்வு செய்வதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த படிகள் அனைத்தையும் முடித்தபிறகு, இ-ஷ்ரம் கார்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
February 11, 2025 5:04 PM IST
சொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் மத்திய அரசு… பதிவு செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!

