1980 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுகை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சுமார் 44 ஆண்டுகள் கழித்து 60 வயது நபரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது டிஎன்ஏ பரிசோதனை. சந்தேகத்தில் பேரில் கண்காணிக்கப்பட்ட நபரின் டிஎன்ஏ-வை காவல்துறை கைப்பற்றியது எப்படி? 44 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண்ணுக்கும் டிஎன்ஏ-விற்கு என்ன சம்பந்தம்? தாமதமாக கிடைத்த நீதியை பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1980 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் கிரேஷாம் என்ற பகுதியில் உள்ள ஹூட் சமூகக் கல்லூரியில் படித்து வந்தவர் 19 வயதான பார்பரா டக்கர். இதே ஆண்டில் தொடக்கத்தில் ஜனவரி 15 ஆம் தேதி இரவில் இவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டார்.
அடுத்த நாள் காலையில் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்கள், இவரின் இறந்த உடலை பார்க்கிங் பகுதியில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறை விசாரணையை தொடங்கினார். ஆனால் இந்த வழக்கில் நெடுநாட்களாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் காணப்பட்டது.
பெண்ணுறுப்பில் கண்டறியப்பட்ட டிஎன்ஏ :
மாணவியின் உடற்கூறு ஆய்வில்போது அவரின் பெண்ணுறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் 2000 ஆம் ஆண்டு ஒரேகான் மாநில காவல்துறை குற்றவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. தொழிட்நுட்ப வளர்ச்சியில் இந்த ஆய்வகத்தில் மாணவியில் மாதிரிகளில் இருந்து ஒரு டிஎன்ஏ கண்டறியப்பட்டது.
குற்றவாளியை கண்டறிய உதவிய பப்புள் கம் :
2021 ஆம் ஆண்டு, அதாவது டிஎன்ஏ கண்டறியப்பட்ட 20 ஆண்டுகள் கழித்து, மரபியல் நிபுணரான பரபோன் நானோலாப்ஸ் என்பவர் இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே பகுதியில் வசிக்கும் ராபர்ட் பிளம்ப்டன் என்பவர் ஒருவேலை இந்த டிஎன்ஏ- விற்கு சொந்தகாரராக இருக்கலாம் என அவர் ஒரு கூற்றை முன்வைத்தார்.
இதற்கு குறிப்பிடும்படியான எந்தவிதமான ஆதாரமும் இல்லாத நிலையில், காவல்துறை அவரை கண்காணிக்க தொடங்கினர். அப்படி, ராபர்ட் பிளம்ப்டன் பப்புள் கம் ஒன்றை வாயில் மென்று கீழே துப்பியுள்ளார். அதனைக் கைப்பற்றிய காவல்துறை ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தது.
ஒத்துப்போன டிஎன்ஏ :
ஆய்வகத்தில் பப்புள் கம்மில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ-வும், மாணவியின் பெண்ணுறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ-வும் ஒத்துப்போன அடிப்படையில், ஜூன் 8 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு ராபர்ட் பிளம்ப்டனை காவல்துறை கைது செய்து காவலில் கொண்டுவந்தது.
குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் :
இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 15 வரை நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் பப்புள் கம்மில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அடிப்படையில் 60 வயதாகும் ராபர்ட் பிளம்ப்டனை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவருக்கான தண்டனை வரும் ஜூன் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுமார் 44 ஆண்டுகள் கழித்து, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை முன்னேற்றம் கண்டு, சரியான ஆதாரங்கள் இல்லாமல் கூற்றின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை இந்த வழக்கின் குற்றவாளியை வெளிச்சம் போட்டு உலகிற்கு காட்டியுள்ளது. 19 வயதில் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு தாமதமாக நீதி கிடைத்து இருந்தாலும், இறுதியில் பலரின் விடாமுயற்சியில் உண்மை வெளிவந்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…