• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகா கும்பமேளாவில் பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடல்! | Bihar Governor Arif Muhammad Khan took holy bath in maha kumbh mela

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகா கும்பமேளாவில் பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடல்! | Bihar Governor Arif Muhammad Khan took holy bath in maha kumbh mela
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடினார். ஆரத்தியிலும் கலந்துகொண்டவர், சனாதனக் கலாச்சாரத்தை பாராட்டினார்.

உ.பி.யின் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு பிஹாரின் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வருகை புரிந்திருந்தார். இவரை உ.பி அரசின் சார்பில் அம்மாநில தொழில்துறை அமைச்சரான நந்து கோபால் குப்தா நந்தி வரவேற்றார். நேராக திரிவேணி சங்கமத்தில் தன் புனித நீராடலை அவர் முடித்தார். முக்கூடலில் நடைபெற்ற ஆரத்தி பூசையிலும் ஆளுநர் ஆரீப் முகம்மது கான் கலந்து கொண்டார்.

பிறகு கரையிலுள்ள சுவாமி பரமானந்த் நிகேதன் முகாமுக்கு ஆளுநர் ஆரிப் சென்றார். முகாமிலிருந்த சிந்தானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஆளுநர் ஆரிப் முகம்மது கானுடன் ஆன்மிகக் கலந்துரையாடல் நடத்தினார். இதில் ஆளுநர் ஆரிப்புக்கு இந்து கலாச்சாரம், கங்கை நதி பாதுகாப்பு மற்றும் கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பிறகு உ.பி அரசின் சிறப்பு பாதுகாப்பு படகில் முக்கூடலில் பயணித்தார் ஆளுநர் ஆரிப்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஆளுநர் ஆரிப் கூறுகையில், ‘இந்தயக் கலாச்சாரத்தின் சனாதனத்தை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். இதனால், நம்மிடையே உள்ள அனைத்து வேற்றுமைகளும் மறைந்து விடும். இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தின் பெருமை மகா கும்பமேளாவில் தெரிகிறது. இந்த நிகழ்வின் மூலம் அமைதி, ஒற்றுமை மற்றும் சர்வதேசத்துக்கானப் சமூகப் பணியை காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகா கும்பமேளாவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் வருகை புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதிக்குள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

Tamilmirror Online || லசந்த படுகொலை: புதிய விசாரணை ஆரம்பம்

Next Post

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் – நியூஸி. இன்று மோதல் | Pakistan vs New Zealand vs South Africa Tri Series

Next Post
முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் – நியூஸி. இன்று மோதல் | Pakistan vs New Zealand vs South Africa Tri Series

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் - நியூஸி. இன்று மோதல் | Pakistan vs New Zealand vs South Africa Tri Series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin