கோலாலம்பூர்: தைப்பூசத் திருவிழா தேர் ஊர்வலத்திற்கு வழிவகுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) முதல் 20க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு படிப்படியாக மாற்றுச் சாலைகள் திருப்பி விடப்படும்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், ஜாலான் துன் எச்.எஸ் லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து பத்து மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் வரையிலான தேர் ஊர்வலத்திற்காக சாலை மூடல் இரவு 9 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சாலைகளில் ஜாலான் துன் எச்.எஸ். லீ, ஜாலான் சுல்தான், ஜாலான் துன் டான் செங் லாக், ஜாலான் புடு, ஜாலான் துன் பேராக், ஜாலான் லெபோ அம்பாங், ஜாலான் அம்பாங், ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் பெலியா, ஜாலான் ஸ்ரீ அமர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாக், ஜாலான் ஷாஹென்ட், ஜாலான் பெர்சாக் லிமா) ஜாலான் கெப்போங் பாரு அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை (பிப் 12) தேரின் அதே சாலைகள் வழியாக பிற்பகல் 3 மணிக்குத் திரும்பும் என்றார். நகர மக்கள், குறிப்பாக சாலையைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பவர்கள் ஜாலான் துன் எச்.எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தை 03-20719999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது 03-20260267/0269 என்ற தொலைபேசி எண் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டார்.
The post தைப்பூசத்தை முன்னிட்டு 20 சாலைகள் மூடப்படும் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

