Last Updated:
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததாக அறிவித்தார்.
வங்கிகளில் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 0.25 விழுக்காடு குறைந்துள்ளதால், வீடு, வாகனக் கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரெப்போ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்றம் மட்டுமே கண்டு வந்த நிலையில், முதன்முறையாகக் குறைந்துள்ளது. இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
நிதி தொடர்பான மோசடிகளை எதிர்கொள்ளும் வங்கிகளுக்காக bank.in என்ற பிரத்யேக டொமைனை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிமுகம் செய்துள்ளார். ஆன்லைன் மோசடிகளைக் குறைக்கும் வகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் இந்த bank.in என்ற பொதுவான டொமைனை அனைத்து வங்கிகளும் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
February 07, 2025 9:19 PM IST


