ரஷ்யாவில் இசை அரங்கில் நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் புதின் கூறியுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் க்ரோகஸ் சிட்டி ஹாலில் வெள்ளிக்கிழமை இரவு பிக்னிக் என்ற இசை குழுவினரின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அப்போது ராணுவ உடையில் திடீரென துப்பாக்கியுடன் 4 பேர் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 125க்கும் மேற்பட்டோர் துடிதுடித்து உயிர் இழந்தனர். தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளையும் வீசி சென்றனர். இதில் அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் உள்பட 11 பேரை காரில் துரத்திச் சென்று ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, சிரியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
சிரிய உள்நாட்டு போரில், அதிபர் பஷீர் அல் அசத்துக்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் செயல்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் மிகப்பெரிய கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்திருந்த சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 எட்டியுள்ளது.
இதனிடையே நாட்டு மக்களிடையே உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், அதை ரஷ்ய காவல்துறை முறியடித்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்ப்வத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் எனும் புதின் கூறியுள்ளார்.
மாஸ்கோ தாக்குதலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த துயரமான நேரத்தில் இந்தியா துணை நிற்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…