பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி பொது போக்குவரத்துக்கான எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய இனி அனுமதி இல்லை என்றும் வாகனங்களின் தேவை, இடவசதி, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை தொகை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

