Last Updated:
Trump Tariffs | அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு புதிய வரி விதித்துள்ளார். கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% மற்றும் சீன பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு புதிய வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியும், சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
புதிய வரிகள் அமெரிக்கக் குடும்பங்களுக்கே சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும் அதை அதிபர் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகவும் மற்றும் எல்லைப் பாதுகாப்பிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் வரை கனடா மீதான வரிகள் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவுக்கு எதிராக ஏதேனும் வரி விதிக்கப்பட்டால், அதற்கான பதிலடி கடுமையான மற்றும் சரியான காரணத்துடன் கூடிய உடனடி நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
February 02, 2025 8:03 AM IST
Trump Tariffs | மெக்சிகோ, கனடா, சீனாவுக்கு புதிய வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!


