• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 31, 2025 7:11 AM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அமைச்சர் நிர்மலா சீதாராமன்அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று சமர்ப்பிக்கிறார். இதில், நாட்டின் பொருளாதார நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, 2025 – 26ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முதல் அமர்வு நிறைவு பெறும். பின்னர், இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: தனிநபர் கடன் – தொழில் கடனுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ள வக்ஃபு வாரியத் திருத்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இதே போன்று, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, வங்கிகள் சட்டத் திருத்த மசோதா உட்பட மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அதேசமயம், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

First Published :

January 31, 2025 7:11 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

பட்ஜெட் கூட்டத் தொடர் 2025: பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Read More

Previous Post

ஆஸ்திரேலிய அணி 654 ரன்கள் குவித்து டிக்ளேர் | Australia declared after scoring 654 runs in first test match versus sri lanka

Next Post

China: “எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள்… ஆனால் ஒரு நிபந்தனை” – 70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்! | China: Company Offers Rs 70 Crore Bonus To Employees with a stunt

Next Post
China: “எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள்… ஆனால் ஒரு நிபந்தனை” – 70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்! | China: Company Offers Rs 70 Crore Bonus To Employees with a stunt

China: "எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள்... ஆனால் ஒரு நிபந்தனை" - 70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்! | China: Company Offers Rs 70 Crore Bonus To Employees with a stunt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin