கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திரன் நம்முனியின் அலைபேசியை அரசாங்க பரிசோதகருக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலானது.
இந்த முறைப்பாடு, இன்று, கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் பிடியில் காணப்பட்ட அலைபேசியை அரசாங்க பரிசோதகருக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்க அனுமதிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை 17ஆம் திகதி விசாரிக்க உத்தரவிட்டது.AN

