• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நாளை தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு | Budget to be presented in Parliament tomorrow

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நாளை தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு | Budget to be presented in Parliament tomorrow
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பட்ஜெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக் கையும் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4, 5-ம் தேதி களில் நடைபெறும். அனைத்து கட்சி கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், கவுரவ் கோகோய், திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் டெரிக் ஓ பிரயன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு இந்த கூட்டத்தில் அரசுத் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், நிதி மசோதா2025, வக்பு மசோதா, வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா, இந்தியன் ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே வாரிய சட்ட ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

விமான போக்குவரத்து துறை தொடர்பான நிதி நலன்களை பாதுகாக்கும் மசோதாக்கள், குடியேற்றம், வெளிநாட்டினர் நுழைவு தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மாற்றும் மசோதாக்கள், கோவா மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான மசோதா ஆகியவையும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள குழப்பமான வரி முறைகளை எளிமைப்படுத்தும் விதமாகவருமான வரி தொடர்பான புதிய நேரடிவரி சட்ட (Direct Tax Code) மசோதாவும் அறிமுகமாகும் என தெரிகிறது.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். புதிதாக 2 வரிப் பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், அது பொருளாதார சுழற்சிக்கு வித்திடும் என்பது அரசின் மதிப்பீடாக உள்ளது. 2026 மார்ச் இறுதிக்குள் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படலாம் என்று யர்னஸ்ட் யங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ரவீந்திரனின் அலைபேசி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Next Post

ஆஸ்திரேலிய அணி 654 ரன்கள் குவித்து டிக்ளேர் | Australia declared after scoring 654 runs in first test match versus sri lanka

Next Post
ஆஸ்திரேலிய அணி 654 ரன்கள் குவித்து டிக்ளேர் | Australia declared after scoring 654 runs in first test match versus sri lanka

ஆஸ்திரேலிய அணி 654 ரன்கள் குவித்து டிக்ளேர் | Australia declared after scoring 654 runs in first test match versus sri lanka

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin