பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் சுமார் 56 வருடங்களாக இருந்த இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். சிகிச்சைக்கு பின்னர் உடலில் ஏற்பட்ட தொற்று காரணாமாக மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
டேனிலா வேரா, 81 வயதாகும் இவருக்கு அடி வயிற்றில் அதிகபடியான வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவரின் வயிற்றில் பகுதியை 3டி ஸ்கேன் எடுத்து பார்த்தலில், அடி வயிற்று பகுதியில் இறந்த குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த கருவை மருத்துவ முறையில் ஸ்டோன் பேபி (Stone baby) என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக கரு என்பது பெண்னின் கருப்பையில் உருவாகும். ஆனால் இவருக்கு அப்படியில்லாமல் கருப்பைக்கு வெளியே உண்டாகியுள்ளது. இந்த நிலை, இடம் மாறிய கர்ப்பம் (ectopic pregnancy) என குறிப்பிடப்படுகிறது.
இவரின் இளம் பருவத்தில் முதன்முறை கருவுற்றப்போது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியில் வளரும் கரு, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும். இறந்த கரு சில நாட்களில் ஸ்டோன் பேபி ஆக மாறிவிடும்.
Also Read : இங்கிலாந்து இளவரசி கேத்தரினுக்கு புற்றுநோய்… திடீர் வீடியோவால் மக்கள் ஷாக்..
டேனிலாவிற்கு முதல் குழந்தை பிறந்தபோதிலில் இருந்து அவருக்கு வயிற்றில் சிறிய வலி மற்றும் அசோகரியம் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, 7 குழந்தைகளுக்கு தயான பின்பும் அவருக்கு பெரியளவில் அறிகுறிகள் தெரியவில்லை. நாளடைவில் வயிற்றில் ஏற்பட்ட அதிக வலிக்காரணமாக மருத்துவமனை அணுகியபோது, முதற்கட்டத்தில் தண்ணீர் தொற்றினால் வலி இருக்கும் என கருதப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு 3டி ஸ்கேன் எடுத்துபார்த்தலில் வயிற்றில் ஸ்டோன் பேபி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஸ்டோன் பேபி நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…