திரிவேணி சங்கமத்தின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவிக் குதித்ததில் பக்தர்கள் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறை தலைமை இயக்குநர் வைபவ் கிருஷ்ணா பேசியதாவது,
”அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்ததால் அதிகாலை 1 – 2 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி பக்தர்கள் உள்ளே நுழைந்ததால், பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதில் 90 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மட்டுமே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். எஞ்சியவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: 5 முக்கிய வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

