
தற்போதைய காலக்கட்டம், பலரது மனநிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. பணியிட போக்குகளால் மன நிம்மதியை இழக்கும் பலர், சுயமாக தொழில் தொடங்கி, அதில் சாதிக்கவே விரும்புகின்றனர்.
அதே நேரத்தில், முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த பல வெற்றிகரமான தொழிலதிபர்கள், தாங்கள் பெற்ற பல கோடி சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு, தனது சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கி வருகின்றனர். இது போன்ற ஒருவரைப் பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். 3 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைந்து நிறுவிய இவர், பிரபல கோடீஸ்வரரின் மகளையும் திருமணம் செய்து கொண்டார்.
தனது ஆரம்ப காலக்கட்டத்தில் பயிற்சியாளராக பணியாற்றி, தனது திறமையை வளர்த்துக் கொண்டு பின்னர், மூன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைந்து உருவாக்கியவர்தான் மகேஷ் கோகினேனி. ஒரு தொழில்நுட்ப தொழில்முனைவோரான இவர், டூ வே என்கேஜ்மென்ட் மற்றும் தனி பயனாக்கப்பட்ட வீடியோ கோரிக்கைகளுக்கான தனித்துவமான தளமான சாப்லுக் (ZapLuk), ஜிஃப்ஸ்கீ (Gifskey) மற்றும் வைஷ் (Wysh) ஆகிய ஸ்டார்ட்அப்களை இணைந்து நிறுவினார்.
இந்த ஸ்டார்ட்அப்களை நிறுவுவதற்கு முன்பாக மகேஷ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றினார். முன்னதாக, 2008இல் வேன்பிக் பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (VANPIC Projects Pvt Ltd) என்கிற நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
மேலும் மகேஷ், டிவிஎஸ் மோட்டார் (TVS Motor Company) நிறுவனத்தின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனின் மகள் லட்சுமி வேணுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018இல் ஜோத்பூரில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. வேணுவின் நிகர சொத்து மதிப்பு 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை தெரிவித்துள்ளது. லட்சுமி வேணு, டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (முன்னர் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 21,867 கோடி (ஜனவரி 24 நிலவரப்படி) ஆகும்.
இதையும் படிக்க: அதிகரித்துவரும் போலி ஜிஎஸ்டி சம்மன்கள்…! CBIC-ல் சரிபார்க்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்…
மகேஷ் கோகினேனி, பிட்ஸ் பிலானி மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (எல்எஸ்இ) ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும், இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். கோகினேனி பிரபல நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான என்ஜி ரங்காவின் கொள்ளுப் பேரனும் மற்றும் சுகுணா மற்றும் டாக்டர் கமலேந்திர கோகினேனியின் மகனும் ஆவார்.
இதையும் படிக்க: போஸ்ட் ஆஃபிஸ் FD vs RD: 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் முதலீட்டில் எது அதிக வருமானத்தை தரும்?
மகேஷ் கோகினேனியின் மனைவியான லட்சுமி வேணு, ஒரு திறமையான தலைவராக தன்னை நிரூபித்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். 2010 முதல் டிவிஎஸ்ஸின் மரபில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துவரும் லட்சுமி, 2022இல் எம்.டி.யாக பதவி உயர்வு பெற்றார். நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் புதுமைகளைக் கொண்டு வருவதிலும் முக்கிய பங்காற்றி வரும் இவர், 2010 முதல் 2022 வரை எஸ்சிஎல் (SCL) இன் இணை நிர்வாக இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
January 28, 2025 2:54 PM IST
மைக்ரோசாஃப்டில் பயிற்சி, 3 ஸ்டார்ட் அப்களுக்கு சொந்தக்காரர், டிவிஎஸ் தலைவரின் மகளுடன் திருமணம் – யார் இந்த மகேஷ்?

