• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராகுல் டிராவிட் முதல் பும்ரா வரை.. டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி விருது பெற்ற 6 இந்திய வீரர்கள்

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ராகுல் டிராவிட் முதல் பும்ரா வரை.. டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி விருது பெற்ற 6 இந்திய வீரர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 28, 2025 2:48 PM IST

வீரேந்திர சேவாக் 2010 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றார். அந்த ஆண்டில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரேந்திர சேவாக் மொத்தம் 1422 ரன்கள் குவித்தார்.

News18

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும் டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் என்ற விருதை ஐசிசி அறிவித்துள்ளது.

31 வயதாகும் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரும் இவர்தான். இதேபோன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட்டார். இதற்கு முன்பாக 5 இந்திய வீரர்கள் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார்கள்.

2004 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டிற்கு ஐசிசி இந்த விருதை வழங்கியது. அந்த ஆண்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ராகுல் டிராவிட் 803 ரன்கள் குவித்தார். இவற்றில் 2 சதங்களும் 3 அரை சதங்களும் அடங்கும்.

2009 ஆம் ஆண்டு கவுதம் காம்பீருக்கு ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கவுதம் காம்பீர் 727 ரன்கள் எடுத்திருந்தார். அன்றைய சூழலில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் கவுதம் காம்பீர் முதல் இடத்தில் இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேனான வீரேந்திர சேவாக் 2010 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றார். அந்த ஆண்டில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரேந்திர சேவாக் மொத்தம் 1422 ரன்கள் குவித்தார். இவற்றில் 5 சதங்களும் 8 அரை சதங்களும் அடங்கும்.

ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 2016 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் 12 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 72 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அதே ஆண்டில் 612 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க – 35 ஆண்டுகளில் முதல் முறை.. பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி

2018 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1322 ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து தற்போது ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதை ஐசிசி அறிவித்துள்ளது.

First Published :

January 28, 2025 2:48 PM IST

Read More

Previous Post

உ.பி-யில் மேடை இடிந்து விழுந்து 7 பேர் பலி… 40 பேர் காயம்

Next Post

மைக்ரோசாஃப்டில் பயிற்சி, 3 ஸ்டார்ட் அப்களுக்கு சொந்தக்காரர், டிவிஎஸ் தலைவரின் மகளுடன் திருமணம்

Next Post
மைக்ரோசாஃப்டில் பயிற்சி, 3 ஸ்டார்ட் அப்களுக்கு சொந்தக்காரர், டிவிஎஸ் தலைவரின் மகளுடன் திருமணம்

மைக்ரோசாஃப்டில் பயிற்சி, 3 ஸ்டார்ட் அப்களுக்கு சொந்தக்காரர், டிவிஎஸ் தலைவரின் மகளுடன் திருமணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin