01
பொதுவாக, நாம் கடைகளில் வாங்கும் தங்க நகைகள் தூய தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. தூய தங்கம் என்பது 24 காரட் தங்கம் ஆகும். ஆனால், 24 காரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. ஏனெனில், அது மிகவும் மென்மையானது. விரும்பிய வடிவமைப்பில் நகைகளை உருவாக்க முடியாது. எனவே, தங்கத்துடன் சிறிதளவு செம்பு சேர்க்கப்படுகிறது. செம்பு சேர்ப்பதால், நகைகளை பல்வேறு வடிவங்களில் வடிவமைக்க முடியும். இவ்வாறு சேர்க்கப்படும் செம்பின் அளவைப் பொறுத்து, தங்க நகைகள் 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட் என வகைப்படுத்தப்படுகின்றன.


