வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வரவு – செலவுத் திட்டத்தில் வழங்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் டொலர் கையிருப்பு ஓரளவு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளுமாறு மத்தியவங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்த போதிலும் தமக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்கள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 400,000 இற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாகவும் வரவு – செலவுத் திட்டத்திற்குப் பின்னர் அல்லது கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

