ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்புசாமி என்பவர். நெசவுத்தொழிலை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். கைத்தறி ஓசையே தாலாட்டு என வளர்ந்த இவர், தனது தொழிலை ஒரு வகை காதலோடு செய்து வருகிறார்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2024 , வெற்றி கோப்பையை சிஎஸ்கே அணி பெற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த வருடம் ஐபிஎல் போட்டியின் போது அனைவரையும் கலங்க வைத்த மெமரபுள் மூமண்ட் ஆன, தோணி ஜடேஜாவை தூக்கிய புகைப்படத்தை கைத்தறியில், திரை சீலையில் கொண்டு வந்த ஈரோடு இளைஞர் அப்புசாமியின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
சென்னிமலையில் கைத்தறி நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகரான அப்புசாமி, அந்தந்த காலகட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை நெசவு மூலம் உருவாக்கி வருகிறார். அந்த வகையில் சென்ற வருடம் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த சடேஜாவை தோனி தூக்கி மகிழும் புகைப்படத்தை எலக்ட்ரானிக் ஜக்கார்டு மூலம் வடிவமைத்துள்ளார்.
இந்த திரைசீலையின் அமைப்பானது14 இன்ச் அகலமும், 36 இன்ச் நீளமும் 120 கிராம் எடையும் கொண்டு உருவாக்கியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…