
19 மாத குழந்தை ஒன்று வீட்டில் உள்ள மீன் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாதுவை, தல்பிட்டிய பகுதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயும் தந்தையும் வீட்டில் இருந்தபோது, வீட்டின் முன் உள்ள மீன் தொட்டியின் அருகே குழந்தை நின்று கொண்டிருந்தது, அவரைக் காணாததால், தேடும் போது தொட்டியில் விழுந்ததை தாய் பார்த்ததாகவும். அக்குழந்தை உடனடியாக தூக்கி எடுத்தபோது, குழந்தை உயிரிழந்து விட்டது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

