• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கும் கும்பமேளா – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் | PM Modi mentioned Maha Kumbh in 2025 first Mann Ki Baat

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கும் கும்பமேளா – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் | PM Modi mentioned Maha Kumbh in 2025 first Mann Ki Baat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: வட​மாநிலங்​களில் நடைபெறும் கும்​பமேளா, தென் மாநிலங்​களில் நடைபெறும் புஷ்கரம் ஆகிய நிகழ்வுகள் சகோதரத்து​வம், நல்லிணக்​கம், ஒற்றுமையை வளர்க்​கின்றன என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

மாதம்​தோறும் ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான 118-வது நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: ஒவ்வொரு மாதத்​தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் உங்களை சந்தித்து வருகிறேன். இந்த மாதத்​தின் கடைசி ஞாயிற்றுக்​கிழமை குடியரசு தினம் கொண்​டாடப்​படு​கிறது. அதனால், ஒரு வாரம் முன்ன​தாகவே உங்களுடன் பேசு​கிறேன்.

இது இந்திய குடியரசின் 75-வது ஆண்டாகும். அரசி​யலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நேரத்​தில் அம்பேத்​கர், நாட்​டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரது வழிகாட்டு​தல்களை நாம் பின்​பற்றி நடக்க வேண்​டும்.

தேசிய வாக்​காளர் தினம் வரும் 25-ம் தேதி கொண்​டாடப்பட உள்ளது. இந்த நாளில்​தான் இந்திய தேர்தல் ஆணையம் அமைக்​கப்​பட்​டது. கடந்த 1951-52-ம் ஆண்டில் முதல்​முறையாக தேர்தல் நடந்த​போது, மக்களாட்சி நிலைத்​திருக்​குமா என்று சிலர் சந்தேகம் எழுப்​பினர். இன்று ஜனநாயகத்​தின் தாயாக பாரதம் உருவெடுத்​துள்ளது. தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி நேர்​மையாக தேர்​தல்களை நடத்தி வரும் தேர்தல் ஆணையத்​துக்கு வாழ்த்துகள்.

உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் மகா கும்​பமேளா நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சமத்து​வம், சகோதரத்து​வம், ஒற்றுமை​யின் சங்கமமாக கும்​பமேளா திகழ்​கிறது. பாரத மக்கள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் குவிந்து வருகின்​றனர். தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்​டின் அனைத்து திசைகளில் இருந்​தும் மக்கள் வருகின்​றனர். இந்த விழா​வில் எங்கும், எதிலும் வேறு​பாடு இல்லை, சாதிபேதம், ஏழை – பணக்​காரர்கள் பேதமின்றி அனைவரும் திரிவேணி சங்கமத்​தில் புனித நீராடு​கின்​றனர்.

பிரயாக்​ராஜ், உஜ்ஜைனி, நாசிக், ஹரித்​வாரில் கும்​பமேளா நடப்​பதுபோல தெற்​கில் கோதாவரி, கிருஷ்ணா, நர்மதை, காவிரி நதிகளின் கரைகளில் புஷ்கரம் நடக்​கின்றன. நமது நதிகளோடு மக்களின் நம்பிக்கைகள் பின்னிப்பிணைந்​துள்ளன. கும்​பகோணம் தொடங்கி திருக்​கடையூர், குடவாசல், திருச்​சேறை வரை பல்வேறு கோயில்கள் கும்பத்​தோடு தொடர்​புடையதாக இருக்​கின்றன. கும்​பமேளா, புஷ்கரம், கங்கா சாகர மேளா ஆகிய நிகழ்வுகள் சகோதரத்து​வம், நல்லிணக்​கம், ஒற்றுமையை வளர்க்​கின்றன.

விண்​வெளி துறை​யில் சாதனை: இந்த 2025-ம் ஆண்டின் தொடக்​கத்​திலேயே விண்​வெளி துறை​யில் பல்வேறு சரித்திர சாதனைகளை பாரதம் படைத்​துள்ளது. பெங்​களூருவை சேர்ந்த ஸ்டார்ட்​-அப் நிறு​வனமான ‘பிக்​ஸல்’, 3 செயற்​கைக் கோள்கள் அடங்கிய தொகுப்பை வெற்றிகரமாக விண்​ணில் செலுத்தி உள்ளது. இதன்​மூலம் பூமியை மிக துல்​லியமாக படம் எடுக்க முடி​யும். இது ஒரு புதிய சாதனை. அதேபோல, விண்​வெளி​யில் 2 விண்​கலன்களை ஒருங்​கிணைத்து இஸ்ரோ விஞ்​ஞானிகள் மாபெரும் சாதனை படைத்​துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து 4-வது நாடாக பாரதம் இந்த சாதனையை செய்​துள்ளது.

விண்​வெளி நிலையம் அமைப்பது தொடர்பாக சென்னை ஐஐடி எக்ஸ்​டெம் மையம் தீவிர ஆராய்ச்​சி​யில் ஈடுபட்டு வருகிறது. 3டி கட்டிடங்​கள், உலோக நுரைகள், கண்ணாடி ஒளி இழைகள் குறித்​தும் இந்த மையம் ஆய்வு மேற்​கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்​கிரீட் கட்டு​மானங்களை கட்டுவது குறித்​தும் ஆய்வு நடத்தி வருகிறது.

ககன்​யான் திட்டம் மற்றும் விண்​வெளி நிலையம் அமைக்க இந்த மையத்​தின் ஆய்வு உறுதுணையாக இருக்​கும். அசாமின் நவுகான் பகுதி​யில் பயிர்களை யானை கூட்டம் நாசம் செய்து வந்தது. இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண, யானைக்கு மிகவும் பிடித்​தமான நேப்​பியர் ரக புற்களை அங்கு உள்ள வறண்ட பூமி​யில் மக்கள் வளர்த்​தனர். இதன்​பிறகு, பயிர்கள் சேதமடைவது கணிசமாக குறைந்​து​விட்​டது.

ஸ்டார்ட்​-அப் செங்​கல்​பட்டு: தற்போது சிறிய நகரங்​களி​லும் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் தொடங்​கப்​பட்டு வருகின்றன. குறிப்பாக செங்​கல்​பட்டு, அம்பாலா, ஹிஸார், காங்க்டா, பிலாஸ்​பூர், குவாலியர், வாஷிம் போன்ற நகரங்​கள் ஸ்​டார்ட்​-அப் மை​யங்​களாக ​மாறி வரு​கின்றன. ஜனவரி 23-ம் தேதி நே​தாஜி பிறந்​தநாள், பராக்​கிரம ​தினமாக ​கொண்​டாடப்பட உள்​ளது. பாரத இளைஞர்​கள் அவரை பற்றி அதிகம் படிக்க வேண்​டும், அவரது வாழ்க்கை​யில் இருந்து உத்​வேகம் பெற வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்

Next Post

ஷின்-சானின் வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த சீன ரசிகர் | Chinese man spends 3 crore to build real Shin-Chan house,

Next Post
ஷின்-சானின் வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த சீன ரசிகர் | Chinese man spends 3 crore to build real Shin-Chan house,

ஷின்-சானின் வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த சீன ரசிகர் | Chinese man spends 3 crore to build real Shin-Chan house,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin