மாத்தறை (Matara) – தங்காலை (Tangalle) பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (19.01.2025) காலை கந்தர, தலல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், எம்பிலிப்பிட்டியவிலிருந்து (Embilipitiya) மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

