• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை ஏன்? | Former Pakistani Prime Minister Imran Khan sentenced to 14 years in prison

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை ஏன்? | Former Pakistani Prime Minister Imran Khan sentenced to 14 years in prison
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (72), தெஹ்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2022-ம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி பிறகு கவிழ்க்கப் பட்டது.

இந்நிலையில், இம்ரான் கான் பிரதமர் பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்கள் செய்ததாக அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக தனது பதவிக் காலத்தில் இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் (50) இணைந்து, ‘அல் குவாதிர் டிரஸ்ட் தொடங்கினர். அதன் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்தும் தீர்ப்பு வெளியாகாமல் தள்ளிப் போனது. இந்நிலையில், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி புஷ்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையையும் வழங்கி நீதிபதி நசீர் ஜாவீத் ரானா நேற்று தீர்ப்பளித்தார்.

இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் இருந்த அவரது மனைவி புஷ்ரா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தீர்ப்பு வெளியான பிறகு புஷ்ராவை போலீஸார் கைது செய்தனர்.

‘‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போல் நான் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்துடன் எந்த சமரசத்திலும் நான் ஈடுபடவில்லை. அரசியலில் இருந்து என்னை ஒதுக்கி வைக்கவே, அரசியல் காரணங்களுக்காக பொய்யான வழக்குகள் என் மீது தொடுக்கப் பட்டுள்ளன’’ என்று இம்ரான் கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.



Read More

Previous Post

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு.. யார் யாருக்கு வாய்ப்பு?

Next Post

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Next Post
இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Makkal Osai

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin