இந்த ஐபிஎல் சீசனில் தோனி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும், களத்தில் புதிய கேப்டன் ருதுராஜுக்கு முடிவுகளை எடுப்பதில் தோனி உறுதுணையாக இருப்பார் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இன்று அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால கேப்டன் பயணம் நிறைவுக்கு வந்தது.
2019 ஆம் ஆண்டுமுதல் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த தோனி, இந்த ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் இடம்பெறப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது கேப்டன்ஷிப் மாற்றம் நடந்திருக்கிறது. தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்புக்கு ருதுராஜ்தான் சரியான நபராக இருப்பார் என்று பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெமிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
தோனி நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று கருதுகிறேன். புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜுக்கு களத்தில் முடிவுகளை எடுப்பதில் தோனி உறுதுணையாக இருப்பார்.
சென்னை அணியின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு இந்த கேப்டன்ஷிப் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2022 இல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்தபோது அதிலிருந்து நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். ருதுராஜை கேப்டனாக நியமித்ததற்கு ஜடேஜாவும் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…