ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

