சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.
இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கான அரச விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (14) காலை பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதிக்கு சீன இராணுவத்தினரால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங் வரவேற்பு அளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

