• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காசி தமிழ்ச் சங்கமம் பதிவுக்கான இணையதள சேவை தொடக்கம் | Dharmendra Pradhan launches Registration Portal for Kashi Tamil Sangamam Phase 3

GenevaTimes by GenevaTimes
January 15, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
காசி தமிழ்ச் சங்கமம் பதிவுக்கான இணையதள சேவை தொடக்கம் | Dharmendra Pradhan launches Registration Portal for Kashi Tamil Sangamam Phase 3
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவுக்கான இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “தமிழகம் – காசி இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்டத்தின் மூலம் மீண்டும் உயிர் பெறும். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கமம், தமிழ்நாடு – காசி இடையேயான காலத்தால் அழியாத பிணைப்பை கொண்டாடவும், நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தவும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்தவும் உத்வேகம் அளிப்பதற்கான முயற்சியாகும்.

இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் தனிச் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அயோத்தியில் குழந்தை ராமரின் ‘பிராண பிரதிஷ்டைக்குப்’ பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இது. காசி தமிழ்ச் சங்கமம் 3-வது கட்டத்தில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 15-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு பிப்ரவரி 24-ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

அகத்திய முனிவரின் பல்வேறு பரிமாணங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை, குறிப்பாக தமிழ்நாடு ஆகிய துறைகளில் அவர் அளித்த அளப்பரிய பங்களிப்புகள் குறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

கல்வி அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் குமார், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரேந்திர ஓஜா, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சுனில் குமார் பர்ன்வால், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

சீன ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இலங்கை ஜனாதிபதி 

Next Post

இது தென்கொரிய போலீஸின் ‘அசாதாரண சம்பவம்’ – பதவி இழந்த அதிபரின் கைதும் பின்னணியும்! | Why has it been so hard to arrest South Korea s impeached president explained

Next Post
இது தென்கொரிய போலீஸின் ‘அசாதாரண சம்பவம்’ – பதவி இழந்த அதிபரின் கைதும் பின்னணியும்! | Why has it been so hard to arrest South Korea s impeached president explained

இது தென்கொரிய போலீஸின் ‘அசாதாரண சம்பவம்’ - பதவி இழந்த அதிபரின் கைதும் பின்னணியும்! | Why has it been so hard to arrest South Korea s impeached president explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin