சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 320 முதல் 350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நியாயமான விலையில் பொதுமக்களுக்கு சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது
எவ்வாறாயினும், அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து, சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தான்தோன்றி தனமாக செயற்படுவதாக பொருளாதார நெருக்கடிக்குள் வாழும் தாம் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சீனி தட்டுப்பாட்டினை நீக்கி, விலையை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

