• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் HMPV பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!

GenevaTimes by GenevaTimes
January 10, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவில் HMPV பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 10, 2025 12:53 PM IST

HMPV Test Cost | இந்தியாவில் சமீபத்தில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் எனப்படும் HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் லேசானது முதல் தீவிர பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். HMPV என்பது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்த கூடிய பிற வைரஸ்களை போன்றது.

News18

இந்தியாவில் HMPV பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பான முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் சமீபத்தில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் எனப்படும் HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் லேசானது முதல் தீவிர பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. HMPV என்பது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய பிற வைரஸ்களை போன்றது என்றும் சொல்லப்படுகிறது.

இது குறிப்பாக குளிர்காலத்தில் பொதுவான அறிகுறிகளாக இருக்கும் குளிர் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சளி மற்றும் சுவாச பிரச்சனைகளுடன் கூடிய வழக்கமான வைரஸ் காய்ச்சலை மட்டுமே இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்றாலும், சிலருக்கு நிலைமை மோசமடையலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

HMPV வைரஸ் சோதனைக்கு எவ்வளவு செலவாகும்?

இந்தியாவில் நாக்பூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இந்த வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. HMPV வைரஸின் தாக்கம் முதன்மையாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தாக்கும் என்று சொல்லப்படுகிறது. HMPV வைரஸ் இருப்பதை கண்டறியும் சோதனைகளில் BioFire panel போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் அடங்கும். இது HMPV உட்பட பல நோய்க்கிருமிகளின் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஒரே நேரத்தில் சோதிக்க உதவுகிறது. டாக்டர் லால் பாத்லேப்ஸ், டாடா 1எம்ஜி லேப்ஸ் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் லேப்ஸ் ஆகிய நன்கு அறியப்பட்ட ஆய்வகங்களில் இந்த சோதனைக்கான செலவு ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை இருக்கிறது. Respiratory group-ல் உள்ள மற்ற சோதனைகளையும் சேர்த்து மொத்த பரிசோதனைக்கும் ரூ.20,000 வரை செலவாகலாம்.

Also Read: Same-Sex Marriage | ஒரே பாலின திருமண அங்கீகாரம்: மறு ஆய்வு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நாசோபார்னீஜியல் ஸ்வாப்கள், ஸ்பூட்டம் ( sputum) அல்லது tracheal aspirates ஆகியவை நோயறிதலுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில சேம்ப்பிள்ஸ் ஆகும். HMPV-ஆனது கடந்த 2001-ல் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒரு RNA வைரஸ் ஆகும். இந்த வைரஸ் குளிர் சீசன்களில் மிகவும் பரவுவதாகவும், சுவாச குழாயில் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகவும் அறியப்படுகிறது. மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு இந்த வைரஸ் பெரும்பாலும் தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பொதுவான சளி அறிகுறிகளாக மட்டுமே வெளிப்படுகிறது.

எனினும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள், சயனோசிஸ், மூச்சுத்திணறல், நிமோனியா அல்லது சுவாசக் கோளாறு உள்ளிட்ட மிகவும் கடுமையான நிலைமைகளை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருபவர்களுக்கு ஏற்படுத்த கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். தற்போது ​​HMPV-க்கு குறிப்பிட்ட ஆன்டிவைரல் சிகிச்சை எதுவும் இல்லை. லேசான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்துகள் கொடுக்கப்பட்டு வீட்டிலேயே குணப்படுத்தப்படுகிறார்கள்.

இருப்பினும் மிகவும் கடுமையான பாதிப்பை HMPV ஏற்படுத்தி இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கலாம். இந்த வைரஸ் பாதிப்பிற்கான தீவிர சிகிச்சைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை, நரம்பு வழியாக திரவங்கள் கொடுப்பது மற்றும் கார்டிகோஸ்டீராய்ட்ஸ் ஆகியவை அடங்கும். இந்த வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் சிறந்த காதாரத்தை பேணுவது மற்றும் தொற்றுகளை குறைக்க மாஸ்க் பயன்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.

First Published :

January 10, 2025 12:53 PM IST

Read More

Previous Post

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Next Post

SPM தேர்வில் வரலாற்று பாட வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது கல்வி அமைச்சகம் – Malaysiakini

Next Post
SPM தேர்வில் வரலாற்று பாட வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது கல்வி அமைச்சகம் – Malaysiakini

SPM தேர்வில் வரலாற்று பாட வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது கல்வி அமைச்சகம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin