
Last Updated:
இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இண்டர்போல் அமைப்புடன் சேர்ந்து செயல்படும் வகையில் பாரத்போல் என்ற இணைய தளத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தளத்தை தொடங்கி வைத்தார். சிபிஐ உருவாக்கி உள்ள இந்த தளத்தின் வாயிலாக, இண்டர்போலிடம் இருந்து தகவல்களை வேகமாக பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச அளவிலான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு இண்டர்போலின் உதவியை நாடுவதற்கு, இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் சர்வதேச அளவிலான விசாரணைகளில் புதிய அத்தியாயமாக இது இருக்கும் என அமித்ஷா தெரிவித்தார்.
சமீப காலங்களில் சைபர் குற்றங்கள், நிதி தொடர்பான குற்றங்கள், ஆன்லைன் வன்முறை, போதை பொருள் கடத்தல், ஆட் கடத்தல் குற்றங்களில் வெளிநாட்டினரின் பங்கு அதிகரித்துள்ள நிலையில், இவை தொடர்பான சர்வசேத அளவிலான விசாரணையை எளிதாக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
January 07, 2025 2:37 PM IST

