• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“10 வருடமாய் மக்களின் வாழ்வை நாசமாக்கிய ஆம் ஆத்மி.. பாஜக தான் வளர்ச்சி தரும்”

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“10 வருடமாய் மக்களின் வாழ்வை நாசமாக்கிய ஆம் ஆத்மி.. பாஜக தான் வளர்ச்சி தரும்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 05, 2025 6:39 PM IST

தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் தடங்கல், மாசு என அனைத்து பருவக் காலத்தையும் ஆம் ஆத்மி அவசரகாலமாக மாற்றிவிட்டது.

News18

டெல்லிக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்தியா அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இல்லாமல் போட்டியிடுகின்றன. எனவே டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவ இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் துவக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுதலை செய்தார். இதன் பிறகு பாஜக சார்பாக பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், “ஆம் ஆத்மி, டெல்லி மக்களின் 10 வருட வாழ்வை நாசமாக்கிவிட்டது வருத்தமாக உள்ளது. டெல்லியின் பல்வேறு இடங்களும் வாகன நெரிசலால் சிக்கித் தவிப்பதால், ஆட்டோக்களும் டாக்ஸிகளும் வர மறுக்கின்றன.

சிஏஜி ரிப்போர்ட்டின் அடிப்படையில் முக்கிய நாளிதழ் ஒன்று இன்று ஷீஷ் மஹாலின் செலவினத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது. கொரோனா காலத்தில் டெல்லி மக்கள் போராடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் (ஆம் ஆத்மி) ஷீஷ் மஹால் கட்டுமானத்தில் கவனம் செலுத்தினர். அவர்கள் டெல்லி மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை.

தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் தடங்கல், மாசு என அனைத்து பருவக் காலத்தையும் ஆம் ஆத்மி அவசரகாலமாக மாற்றிவிட்டது. ஆம் ஆத்மிக்கு டெல்லி மக்களின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. இன்றும் கூட டெல்லியின் அனைத்து வளர்ச்சியும் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில்கள் இன்று டெல்லியின் அனைத்து மூலைகளுக்கும் செல்கிறது. இது பாஜகவால் நடந்தது. அதேபோல், நமோ ரயில் சேவை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என அனைத்தும் மத்திய அரசால் செய்யப்பட்டது. பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம், ஏழை குடும்பங்கள் வீடு கட்ட மத்திய அரசு பணம் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : வாலி படம் அஜித் போல் இரட்டையர்கள்.. திருமணமான புது பெண் மரணத்திற்கு காரணம் என்ன?

எனவே டெல்லி மக்களின் ஒளிமையான எதிர்காலத்திற்கு பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவால் தான் டெல்லியை வளர்ச்சி அடைய செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.

First Published :

January 05, 2025 6:39 PM IST

Read More

Previous Post

இருமலுக்காக வைத்தியசாலை சென்ற பெண்: வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Next Post

காதலியை கரம்பிடித்த மேக்னஸ் கார்ல்சன்.. சிம்பிளாக நடந்த உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் திருமணம்! | Makkal Osai

Next Post
காதலியை கரம்பிடித்த மேக்னஸ் கார்ல்சன்.. சிம்பிளாக நடந்த உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் திருமணம்! | Makkal Osai

காதலியை கரம்பிடித்த மேக்னஸ் கார்ல்சன்.. சிம்பிளாக நடந்த உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் திருமணம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin