தற்போது மார்ச் மாதம் துவங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் வெயிலின் தாக்கத்தினால் சோர்வடைகின்றனர். கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் பகல் முழுவதும் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெப்ப தாக்கத்தை தணிக்க மாவட்டம் முழுவதிலும் சாலையோரம் மரத்தடி நிழல்களில் புதிய புதிய குளிர்பான கடைகளும், சர்பத் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வெயில் சூட்டைத்தணிக்கும் வெள்ளரி, கிர்ணி பழ விற்பனையும் நடந்து வரும் நிலையில் தர்பூசணி பழங்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திண்டிவனம் பகுதியில் இருந்து ஏராளமான தர்பூசணிகள் திருவாரூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தர்பூசணி பழங்கள் முழுதாகவும், கீற்றுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த வருடத்தை போலவே தர்பூசணி கிலோ ரூ.20 முதல் 25 க்கு கிடைக்கிறது. தர்பூசணியில் சி,பி வைட்டமின் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதோடு நீர்சத்து, நார் சத்து நிறைந்த தர்பூசணி உடல் எடையை குறைக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
கண்பார்வை குறைபாடுகள் நீங்கும். ஈறுகளில் பாக்டீரியா தொற்றை தடுத்து உடலில் நீர் சத்தை அதிகரிக்க செய்யும் என்பதால் பொதுமக்கள் பலரும் தங்கள் தேவைக்கு தர்பூசணியை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளும் தர்பூசணியை சாப்பிடலாம் என்பதால் திருவாரூரில் தர்பூசணி விற்பனை வேகம் எடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் செயற்கை குளுரூட்டிகள் கொண்ட குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை பானங்கள் தேடித்தேடி அருந்துவதில் பொதுமக்கள் நாட்டம் செலுத்தி வருவது நல்ல மாற்றத்தை நோக்கி திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…