• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தொடரும் தோல்வி.. அஸ்வின் ஓய்வு.. ரோஹித், கம்பீரிடம் விசாரணை நடத்த பிசிசிஐ திட்டம்

GenevaTimes by GenevaTimes
January 1, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தொடரும் தோல்வி.. அஸ்வின் ஓய்வு.. ரோஹித், கம்பீரிடம் விசாரணை நடத்த பிசிசிஐ திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 01, 2025 4:08 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து வருவதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.

News18

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. இதுகுறித்தும், ஆல்ரவுண்டர் அஸ்வின் ஓய்வு அறிவித்தது தொடர்பாகவும் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் காம்பீரிடம் விசாரணை நடத்துவற்கு பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ள இந்திய அணி 1 போட்டியை டிரா செய்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து வருவதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.

இதேபோன்று ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் நல்ல ஃபார்மில் இருந்த நிலையில் திடீரென அவர் ஓய்வை அறிவித்தார். அதற்கு அவர் அவமானப்படுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று அவரது தந்தை கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிக அனுபவம் இல்லாத பும்ராவின் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையேற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வியும், 1 போட்டியில் டிராவு செய்துள்ளது.

இதேபோன்று கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கியது, 6 ஆவது வீரராக முதலில் களம் இறங்கி பின்னர் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா விளையாடினார். சுப்மன் கில்லை அணியில் எடுக்காதது, ப்ளேயிங் 11 வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது என ரோஹித் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக சீனியர் பேட்ஸ்மேனான அவர், இந்த தொடரில் ஒரு அரைச்சதம் கூட எடுக்கவில்லை. மேலும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் அவர் மொத்தமே 164 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதேபோன்று அஸ்வின் ஒய்வை அறிவித்ததற்கு கவுதம் காம்பீர் காரணமாக இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இருவர் மீது விசாரணை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க -‘கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டோம்…’- தோல்வி குறித்து ரோஹித் சர்மா ஆதங்கம்…

ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக கவுதம் காம்பீர் பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர், உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தோல்வியடைந்தது. தற்போது ஆஸ்திரேலிய மண்ணிலும் தோல்விகளை சந்தித்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்து வருகிறது இந்திய அணி.

First Published :

January 01, 2025 3:54 PM IST

Read More

Previous Post

துணிச்சலின் மறுபெயர் இவர் தான்.. 13 உயிர்களை காப்பாற்றிய பார்வையற்ற நீச்சல் வீரர்… பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்!

Next Post

உள்ளூர் பாடகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர் கைது

Next Post
உள்ளூர் பாடகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர் கைது

உள்ளூர் பாடகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin