
Last Updated:
ரயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர்.
மத்திய பிரதேசத்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் ரயிலுக்கு அடியில் தொங்கியபடி 290 கி.மீ. பயணித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தின் இடார்ச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரேஜ் மற்றும் வேகன் துறை ஊழியர்கள் ரோலிங் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர். எதையோ திருட வந்திருப்பதாக நினைத்து ரயில்வே ஊழியர்கள் திகைத்து போய் நின்றனர்.
பின்னர் வலுக்கட்டாயமாக அவரை ரயிலுக்கு அடியில் இருந்து வெளியேற்றிய ஊழியர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் இளைஞர் அழைத்து சென்று தீர விசாரரித்ததில் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். மத்தியப் பிரதேசத்தின் இடார்ச்சி நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 290 கிலோமீட்டர் தூரம் இவர் ரயில் சக்கரத்தை இணைக்கக்கூடிய இரும்பு உருளையில் தொற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.
உயிரை பணயம் வைத்து இவ்வாறு பயணித்தது, டிக்கெட் எடுக்கப் பணம் இல்லாததே காரணம். ரயிலில் இதுபோன்று ஆபத்து பயணம் சட்டப்படி குற்றமாகும் என்பதால் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இளைஞரின் இந்த அசால்டு பயணம் ரயில்வே நிர்வாகத்தையே அலற விட்டுள்ளது.
December 28, 2024 7:00 PM IST

