புது தில்லி: முன்னாள் பிரதமா் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, உலகம் முழுவதும் இருந்து இரங்கல் குவிந்துள்ளது.
மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர், அவர்களது நாடுகளுடனான அவரது பங்களிப்புகள் மற்றும் அன்பான உறவுகளை நினைவுகூர்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். “ஆப்கானிஸ்தான் மக்களின் அசைக்க முடியாத நட்பு மற்றும் நண்பர்” என்று அழைத்த கர்சாய், சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்” என்று கர்சாய் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங்வுடனான புகைப்படத்தையும் பகிரிந்துள்ளார்.

